Load Image
dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்: ஊழல்வாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்க!

Tamil News
ADVERTISEMENT

உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சினிமா தயாரிப்பாளர்களான அன்புச்செழியன், கலைப்புலி தாணு, ஞானவேல் ராஜா போன்றோரின் வீடுகள் உள்ளிட்ட, 40 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் சொத்துக்களை கண்டுபிடித்து உள்ளனர்.


சினிமா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் முதலீடு செய்யும், அவர்கள் வைத்திருக்கும் பணம் எல்லாம், அவர்களுக்கு சொந்தமானதல்ல... ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பணமே, அவர்களின் கைகளில் புரளுகிறது. அவர்களின் பினாமிகள் தான் இவர்கள் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது.

Latest Tamil News
அதேபோல, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பவர்கள் மற்றும் கல்வி நிலையங்கள் நடத்துவோர் பலரும், அரசியல்வாதிகளின் பினாமிகளாக உள்ளதாக கூறப்படுகிறது. 'கொதிப்பது அடங்க வேண்டுமானால், எரிவதை பிடுங்க வேண்டும்' என்பர். அதனால், பினாமிகளின் சொத்துக்களையும், பணத்தையும் பிடுங்கினால், ஊழல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அடங்குவர் என்பதே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் எண்ணம். அதனால் தான், பணம் அதிகம் புரளும் புள்ளிகளின் வீட்டில் அடிக்கடி, 'ரெய்டு' நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஊழல் அரசியல்வாதிகளின் பணம், சினிமா துறையைச் சேர்ந்தவர்களிடம் தான் குறிப்பிட்ட அளவுக்கு செல்கிறது என்பதற்கு, சமீபத்திய சம்பவமே உதாரணம். அதாவது, ஊழல் வழக்கில் கைதான, மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு பிடித்தமான நடிகையின் வீட்டில், பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை கூறலாம்.


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றது, நடிகையின் வீட்டில் ஊழல் பணம் குவித்து வைக்கப்பட்டிருந்த நிகழ்வு. எனவே, மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள விசாரணை அமைப்புகளின், 'ரெய்டு' போன்ற அதிரடி நடவடிக்கைகள் நாடு முழுதும் அடிக்கடி தொடர வேண்டும். அதன் வாயிலாக, அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஊழல்வாதிகள் ஒழிக்கப்பட வேண்டும். ஊழல்வாதிகளிடம் இருந்து நாட்டை, பிரதமர் மோடி காப்பாற்றுவார் என, நம்புவோமாக!


வாசகர் கருத்து (43)

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  ஊழல்வாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுவது இனியும் நடக்குமா?

 • மனிதன் - riyadh,சவுதி அரேபியா

  ஊழல் இல்லாத ஆட்சி என்று சொல்லிக்கொண்டு, மக்களை வதைக்கிறார்கள்...

 • மனிதன் - riyadh,சவுதி அரேபியா

  அதைத்தான் நாங்களும் சொல்றோம்.., சீக்கிரம் நாட்டை காப்பாத்துங்க....

 • venugopal s -

  அதுதான் நம்ம ரஜினிகாந்த் பிரதமரையும் ஆளுநரையும் சந்தித்து பேசி விட்டு வந்து விட்டாரே ! அதனால் இந்த கேஸ் அவ்வளவுதான், முடிந்து விட்டது. எல்லாரும் வீட்டுக்குப் போய் வேறு வேலை பார்க்கலாம்.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  //கொதிப்பதை நிறுத்த வேண்டுமானால் எரிவதை பிடுங்க வேண்டும்// இதனாலேயே உத்தர பிரதேஷில் புல்டோசர் பயன்படுத்தப்படுகின்றன. வரவேற்கத்தக்க ஒரு நடைமுறை. இது இந்தியா எங்கும் நடைபெற வேண்டும். பினாமி, ஆக்கிரமிப்பு இவைகளை கண்டுபிடித்து தவிர்த்தாலே இந்திய அரசியல் பாதி சரியாகி விடும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்