Load Image
dinamalar telegram
Advertisement

பார்லி., ஒத்திவைப்பு ஏன் ? அமைச்சர் விளக்கம்

Tamil News
ADVERTISEMENT

புதுடில்லி:''திட்டமிடப்பட்டதை விட இரண்டு நாட்களுக்கு முன்னதாக தான் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர நான்கு நாட்கள் அல்ல,'' என, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ல் துவங்கியது. ஆக., 12 வரை கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், கூட்டத் தொடர் நேற்று முன் தினம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. திட்டமிட்டதை விட நான்கு நாட்கள் முன்னதாகவே தொடர் ஒத்திவைக்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.Latest Tamil News
இது குறித்து பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கை:
விவாதம் நடத்த வேண்டும் என சபையில் கூச்சலிட்ட எதிர்க்கட்சியினர் விவாதத்திற்கு அழைத்தால், சபையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்வதையே தொடர்ந்து செய்தனர்.


இந்நிலையில், எதிர்க்கட்சி உட்பட பல்வேறு கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று, மழைக்கால கூட்டத்தொடர், இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் அல்ல. இவ்வாறு அவர் கூறினார். நேற்று முகரம் பண்டிகை, நாளை ரக் ஷா பந்தன் விடுமுறை என்பதால், இரண்டு நாட்கள் என அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (2)

  • அப்புசாமி -

    வெட்டிக்கி சம்பளம். மறுபடியும் எப்போ கூடுவோம்னு தெரியாம தள்ளி வைப்பு. இந்த ரேஞ்சுல நம்ம கம்பெனிகளும், பள்ளிகளும் ஓடுனா... போங்கோ, ரக்ஷா பந்தன் கட்டிக்கிட்டு, மொஹரம். பிரியாணி ஓத்துமையா சாப்புடுங்கோ...

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    தனி நபர்கள் மீது அமலாக்கத்துறையோ அல்லது வருமான வரித்துறையோ நடவடிக்கை எடுத்தால் அதற்கும் கூட எதிர்ப்பு பாராளுமன்றத்தில் தெரிவிப்பது என்றால் பாராளுமன்றம் செயல்பட வாய்ப்பு குறைவு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement