சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில், செஸ் ஒலிம்பியாட் 44வது சீசன் நடக்கிறது. மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இத்தொடரில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்றன. இன்று (ஆக.,9) நடந்த இறுதிச்சுற்றில் ஓபன் பிரிவில் இந்திய 'பி' அணி 3-1 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. ஆனாலும், அனைத்து சுற்றுகளின் முடிவில் 18 புள்ளிகளை பெற்று இந்திய 'பி' அணி வெண்கலம் வென்றது. இந்த 'பி' அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், சரின் நிஹால், ரோனக் சத்வானி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப் பதக்கத்தையும், அர்மீனியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது.

பெண்கள் 'ஏ' பிரிவில் 17 புள்ளிகள் பெற்று இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது. இதில், உக்ரைன் அணி தங்கப் பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றியது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
தனிநபர் பிரிவு
தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்று சாதித்துள்ளார். அதேபோல், நிகள் சரினும் தங்கப் பதக்கம் வென்றார். மேலும், எரிகேசி அர்ஜூன் வெள்ளிப் பதக்கத்தையும், பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
வாசகர் கருத்து (13)
இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் மற்றும் உள்ள இந்திய வீரர் வீராங்கனைகளுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
ஆரம்பத்தில் இருந்தே ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் செஸ் போட்டியில் முதல் இடத்தில் இருந்து விட்டு, கடைசி நேரத்தில் வெண்கல பதக்கம்தான் கிடைத்துள்ளது என்பது மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது. இந்திய அணிகள் மிகுந்த துடிப்புடன் விளையாடின. இருந்தாலும் இரண்டு பிரிவுகளிலும் இந்தியா பதக்கம் வென்றது மிக்க மகிழ்ச்சியே குகேஸ், நிஹல் சரின், அர்ஜுன் எரிகசி, பிரக்ஞானந்தா தனி நபர் பதக்கங்கள் வென்றது மிகவும் பெருமைக்குரிய விசயங்கள் இவை யாவும் செஸ் வீரர்கள், வீராங்கனைகள் நாட்டிற்கு அளித்த சுதந்திர தின பரிசுகள் வாழ்க பாரதம் வளர்க தமிழ்
செஸ் விளையாட்டை தமிழக்த்திற்கு கொண்டுவந்து பதக்கம் வென்ற அணைத்து இந்தியா வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
ரஷ்யா விளையாடவில்லையா? அவர்கள் இருந்திருந்தால் பட்டையை கிளப்புவார்களே..
in the sport of chess why they have seperate womens team and mens team...do u think either brain is superior than others...