மொகரம் பண்டிகையை இஸ்லாமியர்கள் தங்களை வருத்தி கொண்டு கடைபிடிப்பது வழக்கம். அப்படி இருக்கையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையன்று ஹிந்துக்கள் தங்களை வருத்தி கொண்டு தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பள்ளிவாசலில் காப்பு கட்டி ஆண்களும், பெண்களும் ஒரு வாரம் விரதமிருக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் விறகு கட்டைகளை தானமாக வழங்குகின்றனர்.

பள்ளி வாசல் முன்பாக மெகா சைஸ் குழி வெட்டி அதிகாலையில் கண்மாயில் நீராடிய பின் ஆண்கள் வரிசையாக மூன்று முறை தீக்குழி இறங்குகின்றனர். பெண்கள் முக்காடிட்டு அமர்ந்து கொள்ள ஆண்கள் தலை மீது தீ கங்குகளை வாரி இறைக்கின்றனர். இதன் மூலம் பெண்கள் தங்களை நோய் நொடி அண்டாது என்பது நம்பிக்கை. விதைப்பு, திருமணம், தொழில் உள்ளிட்டவற்றிற்கு பள்ளி வாசலில் வந்து அனுமதி கேட்ட பின் தொடங்குகின்றனர். தீக்குழி இறங்குபவர்களுக்கு இஸ்லாமியர்கள் திருநீறு பூசி ஆசி வழங்குகின்றனர்.
தஞ்சாவூர்
அதேபோல், தஞ்சாவூர் அடுத்த காசவளநாடு புதூர் கிராமத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இவர்கள் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையை கிராம விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். கிராமத்தில் ஹிந்துக்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற 10 நாட்களுக்கு முன்பு விரதத்தை தொடங்கினர். ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில் (ஊரின் பொதுவான இடம்) உள்ள அல்லாசாமி என்றழைக்கப்படும், உள்ளங்கை உருவம் கொண்ட பொருட்களை தனியாக எடுத்து பந்தல் அமைத்து விரதம் இருந்து, தினமும் அதற்கு பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி வழிபாடு நடத்தி வந்தனர்.
நேற்று இரவு அல்லா சாமிக்கு மாலை அணிவித்து வீதி உலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்து சென்றனர். அங்கு வீடுகளில் புது மண் கலயம் மற்றும் புது பாத்திரங்களில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து கிராம மக்கள் வரவேற்றனர். இன்று (ஆக.,09) அதிகாலை வரை கிராமம் முழுவதிலும் உள்ள வீடுகளுக்கு இந்த அல்லா சாமி தாரை, தப்பட்டையுடன் எடுத்து செல்லப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் எலுமிச்சை மாலை மற்றும் பட்டுதுண்டை சாத்தி வழிபட்டனர்.
பின்னர் மீண்டும் செங்கரையில் சாவடிக்கு வந்ததும் அங்கு தீமிதிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது அல்லா சாமியை தூக்கி வந்தவர்கள் முதலில் தீ குண்டத்தில் இறங்கினர். இதைத்தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
வாசகர் கருத்து (28)
ஹிந்துக்களின் கேவலமான செயல்.
குரானில் ஹடித்தில் தீக்குழி / தீ மிதி விவகாரமே இல்லை இதை விரும்பி செய்வது இந்துக்கள் மட்டும் தான் அதுவும் முஹர்ரம் இதைத்தான் செகுலர் டோலெராண்ட் இந்துக்கள் என்பது ஒருக்காலும் இந்துக்களுக்காக முஸ்லிம்கள் இப்படி தன் உயிரை வருத்தி ஒரு காரியம் செய்ய மாட்டார்கள் அப்படி செய்தால் அதை ஊர் முழுக்க உலகம் முழுக்க லவுட் ஸ்பீக்கர் வைத்து அல்லாஹு என்று டப்பா டப்பா டப்பா அடிப்பார்கள். முஸ்லீம் மதம் என்பது கிறித்துவில் இருந்து பிரிந்த இன்னொரு கிளை மதம்
மனித நேயம் மிக்க செயல் முஸ்லீம் மதில் இல்லாத ஒன்றை செய்ய அவர்கள் முன்வருவதற்கு காரணம் மத நம்பிக்கை மற்றும் சகோதர துவம் உண்மையான ஹிந்துக்கள் பூக்குழி இரங்கி தாள்களது நேற்று கடனை சேலுத்துவார்கள் மத சடங்குகளும் அதன் மதிப்பும் தெரிந்தவர் தமிழர்கள் அதனால் தான் தமிழ் நாடு வித்தியாசமான நாடு இங்க இறைவன் முன்பு அனைவரும் சமம்
இஸ்லாம் மாற்றமதத்தவரை மனிதநேயத்தோடு அணுகுவதில்லை மும்மதியருடைய குரன்னும் அவர்களுடைய ஆள் தெய்வம் முஹம்மதுவும் இந்த பூமியில் முகமதியர் மட்டும் தான் இருக்கவேண்டும் மற்ற மதத்தவர்கள் யூதர்கள் க்ரைஸ்த்தவர்கள் என்று எல்லாரும் அல்லாஹ்வின் மதம் ஏற்றுக்கொண்டால் வாழலாம் இல்லையென்றால் கொண்டற்றுவிடுவார்கள் அப்படிதான் குரான் முஹம்மதுவும் கட்டளை கொடுத்துள்ளார்கள்.ஆகவே அருமை மக்களே இஸ்லாம் ஒரு பேய் மதம் சாவு குழி அதன் அருகில் யாரும் போகாதீர்கள் குரானை படித்து மற்றவர்களுக்கும் சொல்லி மும்மதியரின் பொய் பிரச்சாரத்தில் விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள் .
ஹிந்துக்களுக்கு இது அநாவசிய வேலை. இந்த முகரத்தில் ஹிந்துக்கள் கலந்து கொள்ளும் விசித்திரம் ஆந்திர தெலுங்கானாவில் தான் அதிகம் பல ஹிந்துக்கள் கூட தர்காவில் அடக்கம் ஆகியிருக்கும் பீர்களது முஸ்லிம் பெயர்களை கூட வைத்துக் கொள்கிறார்கள். நாட்டில் பாதி ஆனால் முஸ்லிம்கள் இது போன்ற மொஹர்ரம் விழாவுக்கு எதிரான வஹாபி மனநிலைக்கு மாறிவிட்டார்கள். மீதியிருக்கும் முஸ்லிம்களும் அலை அலையாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். கடிவாளம் போடுவது கடினம். வஹாபிகளுக்கும் , ஐ எஸ், தாலிபான்களுக்கும் அடைக்கலம் கொடுக்கும் கும்பலும் பெருகி வருகிறது அதனால் இது போன்ற தர்கா வழிபாடு, சீரடி சாய்பாபா எனும் சூஃபி வழிபாடு எல்லாம் நமக்கு அனாவசியம்தான். தேவையில்லாத ஆணிகள் எதற்கு? 🤔 மொகரம் பண்டிகை பெரும்பாலும் ஷியா முஸ்லிம்களால் அனுசரிக்கப்படுவது. நமது நாட்டில் மட்டும் சூஃபி சுன்னி முஸ்லிம்கள் சிலர் மட்டுமே விடாப்பிடியாகக் கடைப்பிடிக்கிறார்கள். போக போக குறைந்து நின்றுவிடும்.