Load Image
dinamalar telegram
Advertisement

பச்சை ரோஜாவை பார்க்க சுற்றுலா பயணியர் ஆர்வம்

Tamil News
ADVERTISEMENT
குன்னுார் : குன்னுார் சிம்ஸ் பூங்கா நர்சரியில், பச்சை நிறத்தில் ரோஜா மலர்கள் பூத்துள்ளன.நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அரிய வகை தாவரங்கள் உள்ளன.

குறிப்பாக, செலோசியா, ஜிப்சோபிலா, அன்ட்ரோனியா, பிகோனியா, பிளாக்ஸ், பேன்சி, பெட்டோனியா, ரோஜா உள்ளிட்ட மலர் நாற்றுக்கள் இங்குள்ள நர்சரியில் உருவாக்கப்பட்டுஉள்ளன.

இந்நிலையில், பூங்கா நர்சரியில் பச்சை ரோஜா தற்போது பூத்துள்ளது. இவற்றில் இருந்து பதியன் எடுத்து, செடிகள் வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதை வாங்க சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement