Load Image
dinamalar telegram
Advertisement

பி.ஏ., தமிழுக்கு குவியும் விண்ணப்பங்கள்; அரசு போட்டி தேர்வுகளால் கிராக்கி

Tamil News
ADVERTISEMENT
சிவகங்கை : டி.என்.பி.எஸ்.சி., மற்றும் போலீஸ் தேர்வுகளில், தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், அரசு கல்லுாரிகளில் பி.ஏ., தமிழ், மொழியியல் வகுப்புகளில் சேர மாணவர்களிடத்தில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. சிறப்பு பிரிவு, கலை, அறிவியல் பிரிவுகளுக்கென தனித்தனியாக முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 2 மற்றும் 4 ஆகிய தேர்வுகளில் அதிக பட்சமாக தமிழ் பாடத்தில் இருந்து வினாக்கள் இடம் பெறுகின்றன.
Latest Tamil News அதற்கு பின், பொது அறிவு, வரலாறு, கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் இருந்து வினாக்கள் இடம் பெறுகின்றன. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்விலும், தமிழ் மற்றும் கொள்குறிவகை தேர்வு நடத்துகின்றனர். அதில், தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அடுத்த தேர்வுக்கான விடைகள் திருத்தப்படும் என்பது நடைமுறை.

இதனால் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் முடித்து அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., துணை கலெக்டர், டி.எஸ்.பி., பதவிகளை பெற இன்றைய இளைஞர்களிடத்தில் ஆர்வம் அதிகரித்துள்ளது.இதன் காரணமாகவே அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பெரும்பாலும் பி.ஏ., தமிழ் மற்றும் பி.ஏ., மொழியியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்கின்றனர்.

தமிழுக்கு அதிகம்

அரசு கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறியதாவது:ஒரு கல்லுாரிக்கு இளங்கலை பட்டப்படிப்பிற்காக குறைந்தது, 3,500 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில், 1,500 விண்ணப்பதாரர்கள் பி.ஏ., தமிழ் பாட பிரிவில் சேர விரும்புகின்றனர்.தமிழுக்கு அடுத்து தான், கம்ப்யூட்டர் சயின்ஸ், வேதியியல், வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து (7)

 • இ.வா - ,

  தமிழ் சொல்லிக்கொடுக்கும் திறமையான ஆசியர்களை முதலில் கண்டு பிடித்து அவர்களை வேலைக்கு சேர்த்து பின்னர் இந்த தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு கற்பியுங்கள்

 • raja - Cotonou,பெனின்

  என்னத்தான் போட்டி தேர்வு வைத்தாலும் தாழ்த்த பட்ட மற்றும் பழங்குடியினத்தவரை தவிர்த்து மற்ற அனைவரும் கையூட்டு கொடுத்தால் தான் திராவிடர்களின் ஆட்சியில் வேலை கிடைக்கும்.....

 • CBE CTZN - Coimbatore,இந்தியா

  மகிழ்ச்சி

 • ஆரூர் ரங் -

  இப்போது பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் போதுமான தமிழ் ஆசிரியர்கள் இல்லை. அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பட்டதாரிகள் வேலையில்லாமல் திண்டாட்டம். இன்னும் பலர் இந்த தமிழ் படித்துவிட்டு என்ன செய்யப் போகிறார்கள்? MNC வேலையா😛 கிடைக்கும்?

 • Girija - Chennai,இந்தியா

  தன் தலையில் தானே மண்ணை போட்டு கொள்ளும் மாணவர்கள் இதில் அதிகப்படியாக மாணவிகள். இப்போது நீங்கள் படிக்க போகும் தமிழில் ஆங்கில சொற்கள் அநியாயத்திற்கு தமிழ் படுத்தப்பட்டுள்ளது. முன்பு அப்படி இல்லை. அப்படியே தமிழ் படுத்தியிருந்தாலும் அதன் ஆங்கில பெயரை ப்ராக்கெட்டில் ஆங்கிலத்திலேயே கொடுத்திருப்பர். ஈறுகெட்ட எதிர்மறை பெயர் எச்சம் இதற்கு ஆங்கிலத்தில் இணையான பதம் என்ன? தவிர புதியதாக ஒன்றை கற்றுக்கொள்வதுதான் வளர்ச்சி பாதைக்கு வழி வகுக்கும். வணிகம் பொருளாதாரம் இல்லாவிட்டால் டிப்ளமோ தொழிற்கல்வி என்று புகுந்து வெளி வாருங்கள் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement