Load Image
dinamalar telegram
Advertisement

முல்லைப்பெரியாறு அணை பற்றி அவதூறு வீடியோவை யூ-டியூப்பில் நீக்க வலியுறுத்தல்: கலெக்டரிடம் விவசாயிகள் மனு

Tamil News
ADVERTISEMENT
தேனி : முல்லைப் பெரியாறு அணை குறித்து வதந்தி பரப்பும் ஆல்பத்தை யூ-டியூப்பில் இருந்து அகற்ற வேண்டும் என, தேனி மாவட்ட விவசாயிகள் கலெக்டர் முரளீதரனிடம் மனு அளித்தனர்.

கூடலுார் பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர் சதீஸ்பாபு, முல்லைச் சாரல் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கொடியரசன், பொருளாளர் ஜெய்பால், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயலாளர் சிவனாண்டி, துணை தலைவர் ராஜா தேனி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: சாசா மீடியா கப்' நிறுவனம் மூலம் ஆக., 3ல் இருமாநில மக்களின் நல்லுறவை கெடுக்கும் நோக்கில், 2014ல் உச்சநீதி மன்றம் தெரிவித்த உத்தரவை மீறி காலடியை சேர்ந்த ஆஸ்லின், ராஜன், சோமசுந்தரம் உட்பட 13 பேர் இணைந்து 3 நிமிடம் 26 நிமிடங்கள் ஓடும் ஆல்பம் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அது பரவி வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் உறுதி தன்மை குறித்து ஆதாரமில்லாதவற்றை கூறி கேரள மக்களை குழப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேனி கலெக்டர் மாநில அரசின் சார்பில்,கேரள டி.ஜி.பி., முதல்வர், இடுக்கி கலெக்டரிடம் பேசி உரியவர்களை கைது செய்தவும், யூ-டியூப்பில் ஒளிபரப்பை ரத்து செய்ய வேண்டும். தடை செய்யாவிட்டால் ஐந்து மாவட்ட விவசாயிகளை திரட்ட ஆர்பாட்டம் நடத்துவோம் என கூறியுள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement