Load Image
dinamalar telegram
Advertisement

அரசியல் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு விருது இல்லை

சென்னை- 'அரசியல் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படாது' என பள்ளிக் கல்வி துறை அறிவித்து உள்ளது.மத்திய மாநில அரசுகள் சார்பில் டாக்டர் ராதா கிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

Latest Tamil News

இந்த ஆண்டில் தேசிய ஆசிரியர் விருதுக்கு மத்திய கல்வி துறை சார்பில் ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனைத்து பணிகளும் முடிந்துள்ளன. மாநில விருதுக்கு தமிழக பள்ளிக் கல்வி துறை நேற்று தான் விண்ணப்ப பதிவை அறிவித்து உள்ளது.மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற வரும் 14ம் தேதிக்குள் மாநில குழுவுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வி துறை செயலர் காகர்லா உஷா தெரிவித்து உள்ளார்.

Latest Tamil News
மேலும் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கான நிபந்தனைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 'அரசியல் கட்சி களுடன் தொடர்புடைய ஆசிரியர்கள் பெயர் விருது பெறுவோருக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெறாது. 'மேலும் வணிக ரீதியாக கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களும் விருது பெற தகுதியற்றவர்கள்' என கூறப்பட்டு உள்ளது.இந்த அறிவிப்பால் ஆளும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் தொடர்புடைய 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பில் உள்ள ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.


வாசகர் கருத்து (16)

  • DOSS - புதுச்செரி,இந்தியா

    காலம் கடந்த முடிவு. வேஸ்ட்.

  • Girija - Chennai,இந்தியா

    ஆனால் பாட நூல் கழக தலைவர் ஆகலாம், ஆபாசமாக அதிகம் பேசும் ஆசிரியர் போட்டியில் வெற்றிபெற்றால் பதவி உங்களுக்குத் தான். ஜாக்ட்டோஜியோ.. நாங்க புதுசா ............

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

    சாதி சங்க உறுப்பினர்கள், கூத்தாடி ரசிகர் மன்ற ஆர்வலர்களாக உள்ள ஆசிரியர்களுக்கும் [வாத்தியார்கள் ] விருது லிஸ்டில் இடம் தரக்கூடாது .......

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்