Load Image
dinamalar telegram
Advertisement

வேலைவாய்ப்பு பதிவு முறைகேடுகள் தடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

Tamil News
ADVERTISEMENT


மதுரை : 'வேலைவாய்ப்பு அலுவலக பதிவுகளில் முறைகேடுகளை தடுக்க, வழிமுறைகளை உருவாக்க வேண்டும். இது, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மீது சாமானியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டி செந்தில்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:பத்தாம் வகுப்பு முடித்து, ஓட்டுனர் உரிமம் பெற்ற தகுதியை சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2010ல் பதிவு செய்தேன்; எனக்கு பதிவு எண் வழங்கப்பட்டது.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டயப் படிப்பை, 2011ல் பதிவு செய்தேன். பதிவை குடும்ப சூழ்நிலையால், 2013ல் புதுப்பிக்கத் தவறிவிட்டேன்.வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பிக்க, 2021ல் தமிழக அரசு சிறப்புச் சலுகை வழங்கியது.
Latest Tamil News
என் பதிவை புதுப்பிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் நுழைந்தேன். என் பதிவு எண்ணைப் பயன்படுத்தி, வேறு ஒருவருக்கு வேலை வழங்கப்பட்டிருந்தது.அவரின் பணி நியமனத்தை ரத்து செய்து, எனக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்கக்கோரி, 2021 செப்டம்பரில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரிடம் மனு அளித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டதாவது:அப்போதைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரனால், சட்ட விரோதமாக பணி வழங்கப்பட்டது. பணி பெற்றவரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தொண்டீஸ்வரன் கட்டாய ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டிருந்ததாலும், அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய, துறை ரீதியான நடவடிக்கைகளை துவங்க, தமிழக அரசிடம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் அனுமதி கோரியுள்ளார்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:அரசிடமிருந்து அனுமதி பெற்று முடிந்தவரை விரைவாக, தொண்டீஸ்வரன் மீது துறைரீதியான நடவடிக்கைகளை துவங்கவும், குற்ற வழக்கு பதிவு செய்யப்படவும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் உறுதி செய்ய வேண்டும்.செந்தில்குமாருக்கு பதிலாக வேலை பெற்ற நபருக்கு எதிராக, விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


இவ்வழக்கை முன்னுதாரணமாக கொண்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுகளில் முறைகேடுகளை தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.இது, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மீது சாமானியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து (6)

 • K.n. Dhasarathan - chennai,இந்தியா

  இது போல முறைகேடுகளை தவிர்க்க இரண்டு வழிகள் உண்டு. 1 . மிக கடுமையான தண்டனைகள், தூக்கு உள்பட கொடுக்க வேண்டும்.2. வேலை வாய்ப்பு அலுவலக நடவடிக்கைகள் வெளிப்படை வேண்டும் மற்றும் தவறு செய்ய முடியாதவாறு சிஸ்டம் வேண்டும். கோர்ட்டும் வேலைவாயப்பு உயர் அதிகாரியும் செய்ய வேண்டும். செய்வார்களா அல்லது வழக்கம் போல தட்டி கழிப்பார்களா?

 • சீனி - Bangalore,இந்தியா

  ஆதார் மூலம் ஓடிபி வைத்து ஆன்லைனில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு பண்ண முடியாதா? அனைத்து குடிமக்களுக்கும் ரேசன் உள்ளது, அல்லது ரேசன் கார்டையும் பதிவு பண்ணுங்க. இதெல்லாம் பண்ணா பல கோடி எப்படி சம்பாதிப்பது ?

 • raja - Cotonou,பெனின்

  பதிவு செய்து காத்திருந்து பணி கிடைக்காமலே மூப்பு அடைபவர்கள் ஏராளம்.. இந்த துறையே ஒரு தெண்ட செலவுக்கான துறை.. இப்போதுதான் வேலை என்றால் எதுக்கெடுத்தாலும் தேர்வு என்கிறார்களே அப்புறம் எதற்கு இந்த துறை? கலைத்துவிட்டால் கோடிகளில் தமிழர்களின் வரியாவது மிச்சம் ஆகும்.....

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   அப்படி பண்ணிட்டா தொண்டீஸ்வரன் போன்றவர்களுக்கு எப்படி கிம்பளம் கிடைக்கும் ??

 • duruvasar - indraprastham,இந்தியா

  சட்டசபையில் நிறைவேற்றிய சட்டத்திற்கு கவர்னர் கையெழுதிட கால வரம்பு வேண்டுமென கேட்கும் திராவிட மாடல் அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கொடுக்கும் கால வரம்பை நிர்னைப்பார்களா ?

 • பிரபு - மதுரை,இந்தியா

  இன்னுமா வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தை மக்கள் நம்பிகிட்டு இருக்காங்க? அதை மூடிவிட்டு அந்த அலுவலர்களை வேறு ஏதாவது துறைக்கு "வேலை செய்வதற்காக" பயன்படுத்தலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்