Load Image
dinamalar telegram
Advertisement

சிறுவாணியில் தண்ணீர் வெளியேற்றம்: முதல்வர் வேண்டுகோளுக்கு பெப்பே

கோவை-முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கண்டுகொள்ளாமல், மூன்றாம் நாளாக நேற்றும், சிறுவாணி அணையில் மதகுகளை திறந்து கேரள நீர்ப்பாசனத்துறை தண்ணீரை வெளியேற்றியுள்ளது.

கேரள வனப்பகுதியில் உள்ள சிறுவாணி அணையில் தேக்கப்படும் தண்ணீரே, கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களின் குடிநீர் ஆதாரம்.அதனால், முழு கொள்ளளவான, 50 அடிக்கு தண்ணீர் தேக்க வேண்டுமென, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.
Latest Tamil News
இருப்பினும், பாதுகாப்பு காரணங்களை கூறி, சிறுவாணியில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதை அம்மாநில நீர்ப்பாசனத் துறையினர் தொடர்கின்றனர்.கடந்த மாதம், 8 அடி தண்ணீரை வெளியேற்றினர். இது குடிநீர் வடிகால் வாரியத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், அணை நீர் மட்டம் உயர்ந்தது.மீண்டும் தண்ணீரை வெளியேற்றி விடக்கூடாது என்பதற்காக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழுவினர், கேரளா சென்று நீர்ப்பாசனத் துறையினரை நேரில் சந்தித்து, முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க வலியுறுத்தினர். இதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.
Latest Tamil News சனிக்கிழமை, நீர் மட்டம், 43 அடியாக இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் சனிக்கிழமை, 8.6; ஞாயிறு, 4; நேற்று, 9 செ.மீ., மழை பதிவானது. சிற்றருவிகளில் இருந்தும் நீர் வரத்து காணப்படுவதால், நீர் மட்டம் மேலும் உயர்ந்திருக்க வேண்டும்.நேற்று வரை தொடர்ந்து மூன்று நாட்கள் மதகுகளை, 50 செ.மீ., திறந்து தண்ணீரை வெளியேற்றி உள்ளனர். அதனால், நீர் மட்டம், 43 அடியாகவே இருக்கிறது. இது தமிழக அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.இரு மாநில செயலர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தினால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.


வாசகர் கருத்து (9)

 • raja - Cotonou,பெனின்

  கேடுகெட்ட ஓங்கோல் கொள்ளையன் துக்ளக்கும் அவன் மந்திரியும் என்ன ......

 • Ganapathy Subramanian - Muscat,ஓமன்

  25 கோடி போதவில்லையாம். விடியா அரசு அதிகமாக கொடுத்தால் தான் இந்த வேண்டுகோள் பரிசீலிக்கப்படுமாம். நம்ப ஊர் கம்மி எம்பி களுக்கு இதற்க்கெல்லாம் நேரம் இல்லை. மத்திய அரசின் திட்டங்களை குறை கூறத்தான் நேரம் இருக்கிறது.

 • duruvasar - indraprastham,இந்தியா

  வெள்ளம் போனா போய்கிட்ட. நம்மட ஸ்டாலினை கேரள மக்கள் சுவீகரிச்சு. அது மதி. பின்ன எந்தா கரையின்னுது. ச்சிரி மோனே

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  கம்யூனிஸ்ட் கட்சி காரன் என்ன செய்கிறான் கேரளா சென்று போராட வேண்டியது தானே .யார் காலிலாவது விழுந்து இரண்டு mla சீட்டு கிடைத்தால் போதும் என்ற நிலையில் தான் உள்ளது அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் .

 • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

  //..கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்...பொருட்படுத்தவில்லை....//.....இவனுங்களோடதான் தமிழக முதல்வர் மலையாளத்தில் பேசுவாரு ...சிறுவாணி மட்டுமல்ல ...பெரியாற்றிலும் மலையாளிகள் பச்சை துரோகம் ..கேரளா வில் ஏற்படும் வெள்ள சேதத்திற்கு காரணம் கிறிஸ்தவர்கள் செய்த கொள்ளை ....பெரியாறு கரை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், ஹோட்டல்கள் என்று வரைமுறையில்லாத ஆக்கிரமிப்பு ...இப்படி செய்து விட்டு பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு வெளியேற்றப்படும் தண்ணீரால் மிகப்பெரிய பாதிப்பு போன்ற மாயையை அம்மாநில அரசியல்வாதிகள் உருவாக்கி அதன் மூலம் தமிழக விவசாயிகளை அச்சுறுத்துவது ..இப்படிப்பட்ட கேரளா அரசுடன் தமிழக முதல்வர் நெருங்கிய நட்பாம்.... எல்லாவற்றிற்கும் ஒன்றிய அரசு என்று குறை சொல்லும் யோக்கியன் மதுரை எம் பி இதுக்கு வாய் திறப்பாரா ? ....கோவை எம்பியும் கண்ணில் தென்படமாட்டார் ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்