Load Image
dinamalar telegram
Advertisement

சோழர் கால பஞ்சலோக பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

Tamil News
ADVERTISEMENT
சென்னை-கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோவிலில், 51 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட பஞ்சலோக பார்வதி சிலை, அமெரிக்காவில் இருப்பதை, போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், தாண்டந்தோட்டம் பகுதியில் நடனபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 1971 மே 12ல், மர்ம நபர்கள், ஐந்து பஞ்சலோக சிலைளை திருடி உள்ளனர். இது குறித்து, நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஊர் மக்கள், அந்தச் சிலைகள், புதுச்சேரியில் பிரெஞ்சு நிறுவனத்தில் உள்ளதாக, போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். எனினும், போலீசார் அலட்சியமாக இருந்துஉள்ளனர்.தற்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பழங்கால சிலைகள் கடத்தல் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது, நடனபுரீஸ்வரர் கோவிலில் சிலைகள் திருடு போனது பற்றி, 2019 பிப்., 14ல், புகார் பதிவாகி உள்ளது. ஆனால், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும் தெரியவந்தது.


இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா, வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் ஏல மையங்களின் இணையதள பக்கங்களில், சோழர் கால சிலைகள் மற்றும் கலைப் பொக்கிஷங்களின் படங்கள் உள்ளதா என்பது குறித்து தேடியுள்ளார்.அப்போது, நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில் திருடப்பட்ட, 1.68 கோடி ரூபாய் மதிப்புள்ள, பஞ்சலோக பார்வதி சிலை, அமெரிக்காவில் சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை ஏலம் விடும் 'போன்ஹாம்ஸ்' என்ற நிறுவனத்தில் இருப்பதை கண்டறிந்தார். இந்த சிலை, 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. மிகவும் அழகியலோடு வடிவமைக்கப்பட்டுள்ள சோழர் கால பார்வதி சிலையை மீட்கும் முயற்சியில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement