Load Image
dinamalar telegram
Advertisement

நேர்மையான அரசியல்வாதி!

Tamil News
ADVERTISEMENT

நேர்மையான அரசியல்வாதி!




'நான் ஒரு அரசியல்வாதி என பெருமையாக கூறுபவர், இவர் ஒருவராகத் தான் இருக்க முடியும்...'என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ராஜிவ் பிரதாப் ரூடியை கிண்டலடிக்கின்றனர், சக அரசியல்வாதிகள்.பீஹார் மாநிலத்தை சேர்ந்த ராஜிவ் பிரதாப் ரூடிக்கு, பிரபல வழக்கறிஞர், பைலட், அரசியல்வாதி என, பல முகங்கள் உண்டு. வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றவர். மோடி தலைமையிலான முதல் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார்.

தற்போது, இவர் அமைச்சராக இல்லாவிட்டாலும், ராஜ்யசபா எம்.பி.,யாக நீடிக்கிறார். பா.ஜ.,வின் முக்கியமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தொடர்ச்சியாக, 'பிசி'யான அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.
பஞ்சாப் பல்கலை முன்னாள் மாணவரான ரூடி, சமீபத்தில், அந்த பல்கலையின் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற ரூடி பேசும் போது உணர்ச்சி வசப்பட்டார்.
'என்னுடன் பள்ளி, கல்லுாரி, பல்கலைகளில் படித்த யாருமே அரசியலில் இல்லை. பெரும்பாலான நண்பர்கள் பல்வேறு அரசு துறைகளில் அதிகாரிகளாக உள்ளனர். நான் மட்டுமே அரசியல்வாதியாகி, எம்.பி., அமைச்சர் போன்ற பதவிகளை வகித்துள்ளேன்...' என, பெருமிதத்துடன் குறிப்பிட்டார், ரூடி.
அவரது நண்பர்களோ, 'அரசியல்வாதிகள் என்றாலே, ஊழல்வாதிகள் என முத்திரை குத்தப்பட்டுள்ள நிலையில், இவர், தன்னை அரசியல்வாதி என பெருமையுடன் கூறுவது ஆச்சரியமாக உள்ளது; அதற்கு இவரது நேர்மை தான் காரணம்...' என்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement