Load Image
Advertisement

நாட்டில் கள்ள நோட்டுகள் புழக்கம் குறைவு: மத்திய அரசு

Tamil News
ADVERTISEMENT

புதுடில்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்யும் அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு பதிலாக, புதிய ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. கருப்பு பணம், கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது.

Latest Tamil News
இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, 2016-17ம் நிதியாண்டில் ரூ.43.46 கோடி அளவிற்கு கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்ட நிலையில், 2021-22ல் ரூ.8.25 கோடி அளவிற்கே கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆண்டு வாரியாக..



2016-17ம் நிதி ஆண்டில் ரூ.43,46,75,710

2017-18ம் நிதி ஆண்டில் ரூ.23,34,91,965

2018-19ம் நிதி ஆண்டில் ரூ.8,23,59,960

2019-20 நிதி ஆண்டில் ரூ. 7,48,03,650

2020-21ம் நிதி ஆண்டில் ரூ.5,45,00,125

2021-22ம் நிதி ஆண்டில் ரூ.8,25,93,565



வாசகர் கருத்து (7)

  • அப்புசாமி -

    பலே...பலே... கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நல்ல நோட்டு மாதிரி அடிக்கிறாங்க போலிருக்கு. டெக்னாலஜி ரொம்ப முன்னேறிடிச்சோ?

  • John Miller - Hamilton,பெர்முடா

    கருப்பு பணம் இந்தியாவில் இருந்து சுவிஸ் பேங்குக்கு சென்று விட்டதால் இங்கே கருப்பு பணப்புழக்கம் குறைவாக உள்ளது.

  • Visu Iyer - chennai,இந்தியா

    2020-21 யை 2021-22 இல் அதிகமாக இருக்கிறது என்று இந்த செய்தியே சொல்லுது.. ஆனால் இவுங்க குறைவு என்று சொல்லுவாங்க.. நாம் ஆமாம் என்று சொல்ல வேண்டுமாம்...

  • s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்

    கள்ள பணமெல்லாம் சுவிஸ் வங்கிக்கு போயிருக்கும்

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    நாட்டில் கள்ள நோட்டுகள் புழக்கம் குறைவு: மத்திய அரசு. ஹி...ஹி...ஹி....ஆனா நல்ல நோட்டுகள் பல ஆயிரம் கோடிகள் கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுக ஆட்சியில் ஊழல்கள் மூலமும் லஞ்சங்கள் மூலமும் புழக்கம் அதிகமா இருக்கே அதை எப்படி நிறுத்துவீங்க ஆபீசர்? ஹி...ஹி...ஹி...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement