Load Image
dinamalar telegram
Advertisement

தண்ணீரை கேரளாவுக்கு திறந்து விடுவது ஏன்?: துரைமுருகன் பதில்

Tamil News
ADVERTISEMENT
வேலுார்: தண்ணீர் அதிகமாக இருந்ததால், முல்லை பெரியாறு அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த பெரிய புதுார் பகுதியில் ரேஷன் கடை திறப்பு விழா இன்று (ஆக.8) நடந்தது. மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரேஷன் கடையை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி குண்டாறு திட்டத்தை தி.மு.க., செயல்படுத்தவில்லை என மார்க்., கம்யூ., செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். அவருக்கு என்ன திட்டம் என்றே தெரியாது. காவிரி - குண்டாறு என்பது ஆறுகள் இணைக்கும் திட்டமாகும்.

ஆறுகள் இணைக்கும் அளவுக்கு இன்னும் தண்ணீரில்லை. அதனால் இணைக்கும் திட்டத்தை நான்காக பிரித்து, மாயனுாரிலிருந்து குண்டாறு வரை கால்வாய்களை வெட்டியுள்ளோம். முல்லை பெரியாறு அணைக்கு அதிகளவு தண்ணீர் வருகிறது, தண்ணீரும் அதிகம் இருக்கிறது. மக்கள் அச்சப்படுவதால், தண்ணீரை திறந்து கேரளாவுக்கு விடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (6)

  • John Miller - Hamilton,பெர்முடா

    துரைமுருகன் இந்த துறைக்கு வயதான காலத்தில் சரிப்பட்டு வரமாட்டார். கால்நடை துறை போன்றவைதான் இவருக்கு சரிப்பட்டு வரும். அடுத்த ஆற்காட்டாறாக மாறி இவர் திமுகவை தேர்தல்களில் தோற்படிப்பதுற்கு முன்பு ஸ்டாலின் முழித்து கொள்ளவேண்டும்.

  • ASIATIC RAMESH - RAJAPALAYAM,இந்தியா

    மக்கள் அச்சப்படுவதால், தண்ணீரை திறந்து கேரளாவுக்கு விடுகிறோம். அப்புறம் எதற்கு கோர்ட் தீர்ப்பு ? கடந்த ஆட்சியில் போராட்டங்கள் ? ஆக மொத்தம் உங்கள் திருட்டு உறவால் தமிழக விவசாயிகள் தான் பாவம்.

  • ஸ்டிக்கன் 1 - al-kyyar,பஹ்ரைன்

    அருவி மாதிரி ஓனரு உளருறாரு

  • Dharmavaan - Chennai,இந்தியா

    இது ஏமாற்று பேச்சு.முல்லை பெரியார் அணைக்கட்டில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லும் பொது 136 அடியிலேயே தண்ணீரை திறப்பது கேரளாவின் கைக்கூலி வேலை

  • jayvee - chennai,இந்தியா

    துரைமுருகனுக்கு கம்யூனிஸ்ட் எல்லாம் வெறும் ஒட்டுன்னிகள்தான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement