பலாத்காரத்துக்கு தூக்கு தேவையா?: ராஜஸ்தான் முதல்வர் சர்ச்சை கருத்து!
புதுடில்லி-''பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிக்கு துாக்கு தண்டனை வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது,'' என, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

டில்லியை சேர்ந்த நிர்பயா என்ற 23 வயது பெண், 2012 டிசம்பரில், ஓடும் பஸ்சில் ஆறு பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, கொடூரமாக துன்புறுத்தப்பட்டார். சிகிச்சை பலனின்றி அந்த பெண் மருத்துவமனையில் உயிர்இழந்தார். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க அறிவுறுத்தப்பட்டது. இதன் பின், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானை சேர்ந்த முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நிர்பயா வழக்குக்கு பின், பாலியல் குற்றவாளிகளை துாக்கிலிடும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதனால், பாதிக்கப்பட்ட பெண் தனக்கு எதிராக சாட்சி சொல்லிவிடுவார் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு ஏற்படுகிறது.

இதையடுத்து பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்களை அவர்களை கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது.இவ்வாறு அவர் கூறினார்.ராஜஸ்தான் முதல்வரின் இந்த கருத்துக்கு பல தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 'பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு துாக்கு தண்டனை கொடுக்கக் கூடாது என, அசோக் கெலாட் கூறுகிறாரா' என, பலரும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (10)
ஏன் அரசியல் வாதிகள் காலக் கொழுந்துகள் நண்பர்கள் சம்பந்தப் பட்டிருந்தால் தண்டனையை ரத்து செய்து விடலாமா
எய்தவனை விட்டு அம்பை நோவதேன்
kejriwal thaan matru படித்தவன் மேலெம்பி வரட்டும் பரம்பரை போதும்
கர்மம் பிடித்த காங்கிரஸ்காரன்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
check recent wanted list with AshK...AIC atleast form a committee to enquire AK