Load Image
dinamalar telegram
Advertisement

அக்கம் பக்கம்

Tamil News
ADVERTISEMENT
கவர்னரின் இரட்டை சதம்!

'கொரோனா ஊரடங்கு பெரும்பாலானோருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கலாம்; ஆனால், இவரை மிகப் பெரிய எழுத்தாளராக்கி விட்டது...' என்று, கோவா கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளையைப் பற்றி கூறுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.

ஸ்ரீதரன் பிள்ளை, கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். பா.ஜ., மாணவர் அமைப்பின் தலைவராக இருந்து, படிப்படியாக உயர்ந்து, கட்சியின் மாநில தலைவர் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்தவர்.கொரோனா பரவல் துவங்கியபோது இவர், வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் கவர்னராக இருந்தார். அதற்கு பின், கோவா கவர்னராக நியமிக்கப்பட்டார்.
கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு பின் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், கடுமையான விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருந்தன.இந்த காலத்தில், ஸ்ரீதரன் பிள்ளை பல புத்தகங்களை எழுதினார்.
இளம் வயதிலேயே எழுத்தாற்றலில் ஆர்வம் உடைய இவர், கொரோனா காலத்தில் தனக்கு கிடைத்த நேரத்தை பயன்படுத்தி, மேலும் பல புத்தகங்களை எழுதி தள்ளினார்.இதுவரை, 150க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
இவற்றில் பெரும்பாலானவை மலையாள கவிதை புத்தகங்கள். 'விரைவில், 200வது புத்தகத்தை எழுதி விடுவேன். புத்தகங்கள் எழுதுவதற்கான நல்ல கரு தேவைப்படுகிறது; அது மட்டும் கிடைத்து விட்டால் இரட்டை சதம் அடித்து விடுவேன்...' என்று பெருமிதத்துடன் கூறுகிறார், ஸ்ரீதரன் பிள்ளை.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement