Load Image
dinamalar telegram
Advertisement

சி.எஸ்.ஐ.ஆர்., இயக்குனராக தமிழக பெண் விஞ்ஞானி நியமனம்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி-அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் தலைமை இயக்குனராக தமிழக பெண் விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.


பெண் ஒருவர், இந்த பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலுக்கு நாடு முழுதும் 38 ஆய்வு மையங்கள் செயல்படுகின்றன. இந்த கவுன்சிலின் தலைமை இயக்குனராக தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டு உள்ளார்.


இவர், பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் பயின்றவர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மைய இயக்குனராக தற்போது பதவி வகிக்கும் இவர், 125க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து உள்ளார்.


அறிவியல் மற்றும்தொழில்நுட்ப கவுன்சில் தலைமை இயக்குனராக அடுத்த இரண்டு ஆண்டுகள் அல்லது அடுத்த இயக்குனர் நியமிக்கப்படும் வரை கலைச்செல்வி பதவி வகிப்பார்.அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலான, சி.எஸ்.ஐ.ஆர்., முதல் பெண் தலைமை இயக்குனர் கலைச்செல்விக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement