

750 பேர் கொண்ட மாணவிகள் குழு
இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் 145 கிலோ எடை கொண்ட இஓஎஸ்2 , இது பூமியை கண்காணிக்க உதவும் . 8 கிலோ கொண்ட ஆசாதிசேட் செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. ஆசாதிசேட் கல்விசார்ந்த ஒன்றாகும். இதனை 750 பேர் கொண்ட மாணவிகள் குழுவினர் தயாரித்துள்ளனர்.
இது வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் விண்ணில் இந்தியா அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், விண்ணுக்கு அனுப்பிய 2 செயற்கைகோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை. தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். 47 நிமிடங்கள் கடந்துவிட்ட போதிலும் தற்போது வரை சிக்னல் வரவில்லை என்றார். இதனால் செயற்கைகோள்களுக்கு என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை:செயற்கைகோள்கள் 356 கி.மீ., சுற்றுவட்டப்பாதைக்கு பதில், 356 கி.மீ., * 76 கி.மீ., நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இனிமேல் அந்த செயற்கைகோள்களை பயன்படுத்த முடியாது. பிரச்னைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. சென்சார் செயலிழப்பை கண்டறிந்து, மீட்பு நடவடிக்கைக்கு செல்ல நடவடிக்கையின் போது பாதை மறியது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன் பரிந்துரை அடிப்படையில் எஸ்எஸ்எல்வி-டி2 செயற்கைகோளுடன் இஸ்ரோ மீண்டும் வரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் அந்த நேருதான் காரணம். நாங்க ஆட்சிக்கு வந்திருந்தால் 1950 லேயே நிலாவைப் புடிச்சிருப்போம். செவ்வாயில் ல்லோருக்கும் வூடு குடுத்திருப்போம்.