Load Image
dinamalar telegram
Advertisement

எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் கடிதம்: தமிழக பா.ஜ., திடீர் சந்தேகம்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: 'முதல்வர் ஸ்டாலின், கடிதம் வாயிலாக வேண்டி கொண்டால் மட்டுமே போதை பொருட்களை ஒழித்து விட முடியாது; கடுமையான சட்டம் தேவை' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
Latest Tamil News

ஒத்துழைப்பு தேவை:



அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின், எம்.எல்.ஏ.,க்களுக்கு எழுதிய கடிதம், நடிகர் வடிவேலுவின் சிரிப்பை காட்டிலும் அதிக நகைச்சுவை உடைய செய்தி.காரணம், ஒரு மாநில முதல்வர், அதுவும் சட்ட ஒழுங்கை பராமரிக்கிற துறை அமைச்சரான அவர், போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து, காவல் துறைக்கு உத்தரவிடுவதற்கு பதில், எம்.எல்.ஏ.,க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Latest Tamil Newsஇதுபோல், எம்.எல்.ஏ.,க்களுக்கு கடிதம் எழுதிய முதல்வரை, இந்தியாவில் எங்காவது காண முடியுமா? நான்கு திசைகளில் உள்ள மாநிலங்களில் இருந்து லாரி, பஸ், ரயில் வாயிலாக போதை பொருட்கள் வருவது நமக்கு தெரிந்ததே!அதை தடுக்கவும், இதற்காக செயல்படும் ஏஜன்ட்களை கண்டறிந்து, கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், எம்.எல்.ஏ.,க்களின் ஒத்துழைப்பு தேவை என்று, முதல்வர் தெரிவிப்பதின் அர்த்தம் புரியவில்லை.

ஒழிக்க முடியாது



மாறாக, எம்.எல்.ஏ.,க்கள் இதில் ஈடுபட்டுள்ளனரா என, மக்கள் குழப்பத்தில் உள்ளனர். கடிதம் வாயிலாக வேண்டிக் கொள்வதால், போதை பொருட்களை ஒழிக்க முடியாது. கடுமையான சட்டம் தேவை. அதை நிறைவேற்ற காவல் துறை உதவி தேவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (39)

  • Balaji - Chennai,இந்தியா

    கடுதாசி போடுறது எங்கள் குலத்தொழில்.. ஹி ஹி..

  • DVRR - Kolkata,இந்தியா

    திராவிட கட்சிகள் அதுவும் திமுக தான் இந்த போதை பொருள் ஏஜெண்டுகள். ஆகவே தான் இந்த கடிதம் எல்லா எம் எல் ஏக்களுக்கும். அதனுடன் கூட யாரிடமிருந்து கமிஷன் இந்த போதைப்பொருள் விற்பனையில் வரவில்லை மற்றும் எங்கு பார்த்தாலும் இந்த ஈ டி ரெய்டு எல்லா இடத்திலும் நடப்பதை சுட்டிக்காட்டி அதில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும் தான் என்பதையும் முதல்வரின் கடிதம் எம் எல் ஏக்களுக்கு என்பதை மிக மிக கச்சிதமாக சுட்டிக்காட்டத்தான் இந்த கடிதம்.

  • sankaseshan - mumbai,இந்தியா

    முதல்வரால் முடியாவிட்டால் அண்ணாமலை IPS இடம் விட்டு விடுங்கள் , சரியாக கவனித்து கொள்வார் குற்றவாளிகளை

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    திமுகவில் கடமைக்கு கடிதம் எழுதுவது வாடிக்கையான ஒரு விளையாட்டு.

  • Kumar - Madurai,இந்தியா

    எங்க அப்பா மாதிரி, மகன், மருமகன் மாதிரி பண்ணுங்க, மாட்டித் தொலைக்காதீங்க மங்குனி அமைச்சர்களே என்று விடியல் கூறுகிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement