Load Image
dinamalar telegram
Advertisement

பட்ஜெட் தொடரில் பங்கேற்க அரசு செயலர்களுக்கு உத்தரவு

Tamil News
ADVERTISEMENT


புதுச்சேரி : பட்ஜெட் தொடரில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அரசு துறை செயலர்கள், துறைதலைவர்களுக்கு தலைமை செய லர் ராஜிவ் வர்மா அறிவுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் அனைத்து துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10ம் தேதி துவங்குகிறது.


இதில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் கால அட்டவணை சட்டசபை செயலகத்தால் தெரிவிக்கப்படும். துறை தலைவர்கள் அனைத்து துறை தொடர்பான விவாதங்கள் நடைபெறும்போது அங்கிருந்து கவனிக்க வேண்டும்.அரசு செயலர்கள், சிறப்பு செயலர்கள் அவர்களது பொறுப்புடைய துறைகளில் விவாதம் நடைபெறும்போது தவறாமல் உடனிருக்க வேண்டும்.கேள்விக்கு திறம்பட பதில் அளிக்கும் வகையில் அமைச்சர்களுக்கு சரியான தகவல்களை தர வேண்டும்.விவாதத்துக்கு வரக்கூடிய சிக்கல்களை முன்கூட்டியே அறிந்து அமைச்சரின் பயன்பாட்டுக்கான தகவல்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் சரியான நேரத்தில் பதில் தர வேண்டும்.கேள்விக்கு பதில்அளிக்கும் தேதியிலிருந்து 48 மணி நேரத்துக்கு முன்பாக சட்டசபை செயலகத்துக்கு பதில்கள் வழங்க வேண்டும்.அனைத்து துறை தலைவர்களும் தங்கள் துறை தொடர்பான கேள்விகள் எடுத்துகொள்ளும்போது ஆஜராக வேண்டும்.விவாதத்தை கவனமாக பின்தொடர்ந்து அமைச்சர்களுக்கு போதுமான பதில்களை அளிக்க வேண்டும். பூஜ்ய நேரம் முடியும் வரை அரசு செயலர்கள், துறை தலைவர்கள் இருக்க வேண்டும்.இவ்வாறு சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement