தி.மு.க., செயலாளர் நீக்கம் தி.மு.க.,வினர் எதிர்ப்பு
ராமேஸ்வரம் : மண்டபம் தி.மு.க., செயலாளர் நீக்கப்பட்டதற்கு தி.மு.க., நிர்வாகிகள், கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.மண்டபம் பேரூராட்சி தி.மு.க., செயலாளராக ராஜா இருந்தார். இவர் தற்போது மண்டபம் பேரூராட்சி தலைவராகவும் உள்ளார். இவரை, இரு தினங்களுக்கு முன் தி.மு.க., செயலாளர் பதவியில் இருந்து நீக்கி, புதிய செயலாளராக அப்துல்ரகுமான் மரைக்காயரை கட்சி தலைமை நியமித்தது.
இதற்கு தி.மு.க., வார்டு செயலாளர்கள், கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மண்டபத்தில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் ராஜாவை, மீண்டும் நகர செயலாளராக நியமிக்க கட்சி தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தீர்மானத்தில் தெரிவித்தனர்.ராஜாவுக்கு ஆதரவாக 12 வார்டு செயலாளர்கள்,13 கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!