திருவிளக்கு பூஜை
திருவாடானை : திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நேற்று முன்தினம் இரவு இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் உலக அமைதிக்காக 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக பாகம்பிரியாள் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கீழரத வீதியில் அமைக்கப்பட்ட பந்தலில் பெண்கள்விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனர். இந்து மக்கள் நல இயக்க மாநில தலைவர் இளையராஜா வரவேற்றார். பா.ஜ., மாவட்ட தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். இந்து மக்கள் நல இயக்க கொள்கை பரப்பு செயலாளர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!