ஆக்கிரமிப்பால் திணறும் வாகனங்கள் மல்லாங்கிணரில் திண்டாடும் மக்கள்
காரியாபட்டி : மல்லாங்கிணர் பேரூராட்சியில் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்பால் வாகனங்கள் சிக்கி திணறி வருவதால் வாகன ஓட்டிகள் படாத பாடு படுகின்றனர்.மல்லாங்கிணருக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இதனால் மெயின் பஜாரில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். மெயின் பஜார் குறுகலான பகுதியாக இருப்பதால் இரு வாகனங்கள் விலகி செல்வதில் சிரமம் ஏற்படும். காலை மாலை பள்ளி, அலுவலக நேரங்களில் 200 மீட்டர் தூரத்தை கடக்க அரை மணி நேரம் ஆகிறது. இதனால் உரிய நேரத்திற்கு பஸ்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதற்கு காரணம் அப்பகுதியில் கடை வைத்திருப்போர் ரோட்டை ஆக்கிரமித்து ஷெட்டு அமைத்ததுதான். ரோடு வரை இரும்பு கம்பிகளை நீட்டி வைத்து வாகன ஓட்டிகளுக்கு விபத்து அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் டூவீலர்களை ரோட்டோரத்தில் நிறுத்தி, கனரக வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.காரியாபட்டி பகுதியில் இருந்து விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் அதிகாரிகள் காலை நேரத்தில் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்காகவே பலர் மல்லாங்கிணர் வழியில் செல்வதை தவிர்க்கின்றனர். பலமுறை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாவட்ட நிர்வாகம் மக்கள் சிரமத்தை தவிர்க்க மல்லாங்கிணர் மெயின் பஜாரில் உள்ள அக்கிரமிப்புகளை அகற்றி நெருக்கடி இல்லாமல் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் புறவழிச் சாலை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!