இரும்பு மனிதன் போட்டிவென்ற இளைஞர்
கீழக்கரை : சென்னையில் தமிழ்நாடு பாடி பில்டர் வெல்பர் சொசைட்டி நடத்திய 9வது அயர்ன் மேன் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த இளைஞருக்கு பாராட்டு விழா நடந்தது.கீழக்கரை சாலைத்தெருவை சேர்ந்தவர் முகம்மது ரியாலுதீன் 27. எச்.ஆர்., பிட்னஸ் உடற்பயிற்சிக்கூடம் நடத்தி வருகிறார். நடப்பாண்டில் மிஸ்டர்ராமநாதபுரம் பெற்று முதல் இடத்தையும், மிஸ்டர் தமிழ்நாடு பெற்று இரண்டாமிடத்தையும், சென்னையில் நடந்த சவுத் இந்தியாவில் 7வது இடத்தையும் பெற்றுஉள்ளார்.முகம்மது ரியாலுதீன் கூறியதாவது:மாநில அயர்ன் மேன் போட்டியில் மூன்றாவது இடத்திலும், சிறந்த பிசிக்கல் போட்டியில் டாப் 10 இடத்தை தக்க வைத்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். கீழக்கரை துணைச்சேர்மன் ஹமீது சுல்தான், ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல்கபீர் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!