ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆக்கிரமிப்பு கண்துடைப்பு அகற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பஜார் வீதிகளில் ஆக்கிரப்புகள் அதிகரித்து பொதுமக்கள் நடக்க கூட சிரமப்படும் நிலையில், கண்கூடாக பார்த்தும் அதனை அகற்றாத மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கடந்த சில நாட்களுக்கு முன் சிவகாசி ரோட்டில் கண்துடைப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து நகரின் எல்லைப் பகுதி வரை தேசிய, மாநில நெடுஞ்சாலை ரோடுகள், நகராட்சி ரோடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு பொதுமக்கள் எளிதில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.பஸ்கள் செல்லும் அளவிற்கு அகலமான நகைக்கடை பஜார் ரோடுகளில், தற்போது ஒரு டூவீலர் கூட எளிதாக செல்ல முடியவில்லை.
அந்தளவிற்கு ஆக்கிரமிப்புகள் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனை அகற்ற வேண்டிய அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கண்கூடாக பார்த்தும், கண்டு கொள்ளாமல் உள்ளனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் செங்குளம் கண்மாய் பகுதியில் இருந்து, நகராட்சி குப்பை கிடங்கு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். இதேபோல் பஜார் வீதிகளிலும் ஆக்கிரப்புகள் அகற்ற வேண்டும் என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!