ADVERTISEMENT
பண்ணைக்காடு : கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கொடைக்கானல் பண்ணைக்காடு ரோட்டில் ராட்சத மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
வத்தலகுண்டு நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி, ஏரிச்சாலை உள்ளிட்ட பகுதியில் மரங்கள் விழுந்ததை நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையினர் அப்புறப்படுத்தினர். காய்கறி பந்தல், மலைவாழை, அவகடா, ஆரஞ்சு, ஏலக்காய் பயிர்கள் காற்றிற்கு சேதமடைந்தது. இந்த பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!