Load Image
dinamalar telegram
Advertisement

கிரிக்கெட்: திண்டுக்கல், தஞ்சை அணிகள் வெற்றி



திண்டுக்கல் : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக 16 வயதிற்குட்பட்டோருக்கான பி.ஆர். தேவர் கோப்பைக்கான போட்டிகள் 8 மாவட்டங்களில் நடக்கிறது. திண்டுக்கலில் நேற்று நடந்த போட்டியில் திண்டுக்கல், தஞ்சை அணிகள் வெற்றி பெற்றன.ஸ்ரீ வீ கல்லுாரியில் நடந்த போட்டியில் தஞ்சை, கள்ளக்குறிச்சி அணிகள் மோதின. முதலில் விளையாடிய கள்ளக்குறிச்சி அணி 39.1 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. திபக், பத்மசரண் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் விளையாடிய தஞ்சை அணி 20.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ஜெயேஷ் யோகேஷ்வரன் 37 ரன்கள் எடுத்தார்.மேலும் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லுாரியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 49.5 ஓவரில் 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஷ்யாம் சபரி, ஹரிஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். சேசிங் செய்த ராமநாதபுரம் அணி 46.3 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. திண்டுக்கல் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹரிஸ் 26 ரன்கள் எடுத்தார். சசிந்தர், நரேன் விமல் தலா 3 விக்கெட் வீழத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement