Load Image
dinamalar telegram
Advertisement

பாலியல் குற்றங்களை தடுப்பது எப்படி: விழிப்புணர்வு தரும் சத்தியவாணி

Tamil News
ADVERTISEMENT
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவ மதிப்புறு தலைவராக இருப்பவர் வழக்கறிஞர் சத்யவாணி. இவர் வரலாற்றுச் சிறப்புகள் குறித்த இடங்களில் ஆய்வுகளை நடத்தி 'உடுமலை வரலாறு', 'தென்கொங்கின் தொன்மங்கள்' என்ற புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய 'என்னை வாழ வைப்பாயா வள்ளி' என்ற கவிதை நூல் பெரும் கவனத்தை ஈர்த்தது. பள்ளி, கல்லூரிகளிலும், கிராமப்புற பெண்கள், குழந்தைகளுக்கு என 500க்கும் மேற்பட்ட சட்ட விழிப்புணர்வு முகாம்களை நடத்தி உள்ளார்.

பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்து இவர் கூறியது:

18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை திருமணத்தில் உட்படுத்துவதை சட்டம் தடை செய்துள்ளது. திருமணத்திற்கு பின் கணவன் மனைவிக்குள் ஏற்படும் தாம்பத்ய உறவு சீண்டல்களை 18 வயதிற்குக்கீழ் உள்ள குழந்தைகளிடம் முழுமையாகவோ, பகுதியாகவோ முயற்சிப்பதே பாலியல் அத்துமீறல், பாலியல் சீண்டல் என்ற வார்த்தைகளின் கீழ் வருகிறது.குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது 'போக்சோ' சட்டம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் கடும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.


இந்திய தண்டனைச் சட்டத்தில் இல்லாத மரண தண்டனை போக்சோ சட்டத்தில் உண்டு. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை அவர்களுக்கான பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கித் தருவது பெற்றவர்களையே சாரும்.பெற்றோர் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு குழந்தைக்கும் நுாறு நண்பர்கள் இருக்கலாம். ஆனால் பெற்றோர் நட்போடு இருந்தாலே போதுமானது. தவறு செய்தால் தட்டி கேட்கவும், குழந்தைகளுக்கு மனரீதியான, உடல் ரீதியான பிரச்னை வரும்போது ஆறுதல் படுத்தி அவர்களை தேற்றிவிடவும் நாம் பழகிக்கொள்ள வேண்டும்.


குழந்தைகளை கட்டுப்பாடுகளுடன் வளர்க்க வேண்டும். ஆடை நாகரிகத்தை கற்றுத்தர வேண்டும். பாலியல் குற்றங்களை தடுப்பது என்பது பெற்றோர்களின் விழிப்புணர்வினால் மட்டுமே முடியும்.முன்பெல்லாம் தன்மானம் கருதி தவறான பழக்கங்களுக்கும் குற்ற செயல்களில் ஈடுபடவும் அஞ்சினர். ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை. இன்று பக்கத்து வீட்டில் இருப்பவர்கூட யாரென்று அறிந்து கொள்ள நேரமில்லாமல் ஓடுகிறோம்.



அடையாளமின்றி இருப்பதனால் தவறு செய்வதும், தவறாக நடப்பவரிடம் மாட்டிக்கொள்வதும் எளிதாகிவிடுகிறது.பெண்கள், குழந்தைகளிடம் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதை என் கடமையாக கொண்டு செயல்படுகிறேன் என்றார்.தொடர்புக்கு sathyavanibalaji@gmail.com
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement