Load Image
dinamalar telegram
Advertisement

மாநில அளவிலான இறகுபந்து போட்டி



சிவகாசி : சிவகாசி எஸ்.எப்.ஆர்.,மகளிர் கல்லுாரி, சிவகாசி பைரோ டவுண் இன்னர் வீல் சங்கம் சார்பில் மாநில அளவில் மகளிருக்கான இறகுபந்து போட்டி நடந்தது.இன்னர்வீல் சங்க துணை திட்ட இயக்குனர் அர்ச்சனா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி, அருண் அன்சோ ஸ்போர்ட்ஸ் அகாடமி இயக்குனர் அருண் துவக்கி வைத்தனர். மதுரை, திருச்சி, கோயம்புத்துார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெண்கள் கலந்து கொண்டனர்.


18 வயதுக்கு மேற்பட்டவருக்கான ஒற்றையர் போட்டி,18 முதல் 25 வயதினருக்கான இரட்டையர் போட்டி, 25 வயதிற்கு மேற்பட்டவருக்கான இரட்டையர் போட்டி என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு சிவகாசி பைரோ சிட்டி ரோட்டரி சங்க தலைவர் மகேந்திர குமார் பரிசு வழங்கினார். இன்னர்வீல் சங்க தலைவி மாரீஸ்வரி நன்றி கூறினார்.ஏற்பாடுகளை கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி, இன்னர் வீல் சங்க திட்ட இயக்குனர் ஜெயந்தி செய்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement