Load Image
dinamalar telegram
Advertisement

ஆடி திருவிழா அன்னதானம்



நிலக்கோட்டை : நிலக்கோட்டையில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் ஆடி திருவிழாவில் அன்னதானம் நடந்தது.கணபதி ஹோமத்துடன் துவங்கி கரகம் எடுத்துவரப்பட்டு வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளில் அம்மன்ஊர்வலமாக வந்தார். பின் மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பல்வேறு அலங்காரங்களில் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. தி.மு.க., மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கரிகால பாண்டியன் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் காளிமுத்து பங்கேற்றார். விழா ஏற்பாடுகளை நிறுவனர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் சுரேந்திரன், பானுமதி செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement