ADVERTISEMENT
ஸ்ரீவில்லிபுத்தூர் : மனநலம் பாதித்த ஒன்பது வயது மகளின் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்த ஸ்ரீவில்லிபுத்துார் இன்ஜினியரிங் பட்டதாரி தம்பதி முனீஸ்வரன், ரேவதிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் வாழைக்குளம் தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன், 45. இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். இவரது மனைவி ரேவதி 38, இன்ஜினியரிங் பட்டதாரியான இவரும், தனியார் கல்லுாரி பேராசிரியராக பணியாற்றினார்.

சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். முனீஸ்வரன், ரேவதி மீது மல்லி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் இருவருக்கும் ஆயுள் தண்டனை, ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நீதியை நிலைநாட்டி விட்டனர். 25 - 30 கொலைகளை செய்தவர்கள் மறுபடியும் மறுபடியும் ஜாமின் பெற்று குற்றங்கள் செய்கின்றனர்.