பாட்னா : ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும், 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக பீஹாரில் போராட்டங்களை துாண்டிவிட்ட நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு கடந்த ஜூனில், அக்னிபத் என்ற முப்படைகளுக்கு ஆள் சேர்க்கும் திட்டத்தை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீஹார் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.பீஹாரில் நடந்த போராட்டத்தில் பல ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வன்முறை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

இந்த வன்முறையால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு சொத்துக்கள், 2,000க்கும் மேற்பட்ட ரயில்கள் சேதம் அடைந்தன.இந்நிலையில், பீஹாரின் லக்கிம்புர் நகரில், மனஷியாம் தாஸ் என்ற நக்சலைட் பதுங்கியிருப்பதாக பீஹார் போலீசாருக்கு, தெலுங்கானா மாநில போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், மனஷியாம் தாஸ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து பீஹார் போலீஸ் உயரதிகாரிகள் நேற்று கூறியுள்ளதாவது:கைது செய்யப்பட்ட மனஷியாம் தாஸ், நக்சலைட் அமைப்புடன் நீண்டகாலம் தொடர்புடையவர். இதன் மூத்த தலைவர்களுடன் இவருக்கு தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்தது. அக்னிபத் திட்டத்தை எதிர்த்து பீஹாரில் நடந்த போராட்டத்தின்போது, ரயில்களுக்கு தீ வைக்கும்படி, போராட்டக்காரர்களை இவரும், இவருடன் தொடர்புடைய சிலரும் துாண்டிவிட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த கைது நடவடிக்கையின் வாயிலாக, அக்னிபத் வன்முறை தொடர்பான விசாரணையில் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இவன் பப்பூவின் சீடனாக இருக்க கூடும் முட்டிக்கு முட்டி தட்டி விசாரியுங்கள்