சென்னை : ''பாலிலும், பால் கவரிலும் ஊழல் நடந்தது ஊரறிந்த உண்மை,'' என பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.சென்னை, ஆவடியில், பா.ஜ., சார்பில், 75 வது சுதந்திர தின விழிப்புணர்வு பாத யாத்திரை நேற்று நடந்தது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் தலைமையில் நடைபெற்ற பாதயாத்திரையில், சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.பின், செய்தியாளர்களிடம், அண்ணாமலை கூறியதாவது:தேசிய கொடி ஏந்தி மக்கள் எழுச்சியுடன் இந்த பேரணி நடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களிடையே, தேசப்பற்று குறித்த போட்டிகள் பா.ஜ., சார்பில் நடத்தப்பட உள்ளது.தமிழகத்தில், பொதுமக்களும், தி.மு.க.,வினரும் வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற அழைப்பை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்.தமிழகத்தில் பாலிலும், பால் கவரிலும் ஊழல் நடந்துள்ளதாக நான் மட்டும் சொல்லவில்லை;

பல ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது இருக்கும் சூழலில், அந்த பதவியில் நீடிப்பது அழகா என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலையாரே... திராவிட கட்சிகளுக்கு ஊழல் செய்வதிலே கைதேர்ந்தவங்க.. இவங்களுக்கு ஊழல் செய்து சொத்து சேர்ப்பதைத் தவிற இவங்களுக்கே வேற எதுவுமே தெரியாது.. இவங்க ஆட்சியைப் பிடிப்பதே கோடி கோடியா சம்பாதிக்குறதுக்குத் தான். அந்த எண்ணத்தாலேதான் கோடிக்கணக்குலே வாரி இறைத்து தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதே.. சம்பாதித்து விடலாம் என்ற அதீத நம்பிக்கை செயலும் அப்படியேதானே இருக்கும். இப்படி சம்பாதிக்கும் எண்ணத்தோடு வருபவன் எப்படி மக்களுக்கு செலவு செய்யத்தோனும். இதனை மக்கள் என்றைக்கு புறிஞ்சுக்குறாங்களோ. அன்றைக்கு இவங்களுக்கு இங்கே இடமில்லை.