ADVERTISEMENT
பர்மிங்காம்: காமன்வெல்த் கிரிக்கெட் பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது.
காமன்வெல்த்தில் முதன் முறையாக பெண்கள் 'டி-20' கிரிக்கெட் அறிமுகம் ஆனது. இதன் அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. ஸ்மிருதி மந்தனா 23வது பந்தில் அரைசதம் எட்டினார். இது இவரது அதிவேக அரைசதம். மந்தனா 32 பந்தில் 61 ரன் விளாசினார். ஷபாலி (15), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (20), தீப்தி (22) சற்று கைகொடுத்தனர். முதல் 6 ஓவரில் 64 ரன் எடுத்த இந்தியா, கடைசியில் 20 ஓவரில் 164/5 ரன் மட்டும் எடுத்தது. ஜெமிமா (44) அவுட்டாகாமல் இருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!