Load Image
dinamalar telegram
Advertisement

தேடல் இருந்தால் எழுத்தாளராகலாம்



மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் வழக்கறிஞர் பினேகாஸ் எழுதிய மனசெல்லாம் மாஞ்சோலை' நுால் வெளியீட்டு விழா நடந்தது. வழக்கறிஞர் விக்டோரியா வரவேற்றார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தலைமை வகித்தார்.உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி வெளியிட, பினேகாஸ், ஆசிரியர்கள் அருள்தாஸ், பிச்சம்மாள் பெற்றுக் கொண்டனர்.


உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, எழுத்தாளர்கள் அல்லி பாத்திமா, ரகுநாத், வழக்கறிஞர்கள் லஜபதிராய், ராபர்ட் சந்திரகுமார், பார்த்திபன், ஆனி அபிநயா கலந்து கொண்டனர்.எழுத்தாளர் சோ.தர்மன் பேசியதாவது: முகநுால் வருகைக்கு பின் நாட்டில் 95 சதவீதம் பேர் கவிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும் மாறிவிட்டனர்.

அது தவறல்ல என்றாலும், முழுமையான எழுத்தாளராவதற்கு தொடர் தேடல், கடுமையான உழைப்பும் அவசியமாகும்.கட்டுரை எழுதுவது போன்று நாவல் எழுதுவது சுலபமல்ல, என்றார். பதிப்பாசிரியர் காந்திமதிநாதன் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement