ஒரே நாளில் ரூ.15 லட்சத்திற்கு ஏலம் போன விளைபொருட்கள்
திருமங்கலம் : திருமங்கலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ரூ. 15 லட்சத்திற்கும் மேல் விவசாய பொருட்கள் விற்பனை நடந்தது.திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு மறைமுக ஏலம் மூலம் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம்.
இதன் மூலம் கமிஷன் இன்றி விளைபொருட்கள் விற்பனை நடந்து வருகிறது.பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உற்பத்தி செய்த இரும்பு சோளம், எள், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட விளை பொருட்கள் ஏலத்திற்கு வந்தன. மறைமுக ஏலம் மூலம் 660 குவின்டால் இரும்பு சோளம், 900 கிலோ எள், கொப்பரை தேங்காய் 234 கிலோ ஆகியவை ஏலம் விடப்பட்டன.
இதன் மூலம் ரூ. 15 லட்சத்திற்கும் மேல் வர்த்தகம் நடந்தது.தினசரி சிறிய அளவில் மட்டுமே எள் விற்பனைக்கு வருவதால் வாரம் ஒரு முறை செவ்வாய் கிழமை மட்டும் ஏலம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு விற்பனை நிலைய கண்காணிப்பாளர் வெங்கடேஷை 90251 52075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!