ADVERTISEMENT
மேலுார் : 'மேலுார் அருகே மருதுார் கண்மாயில் மடை கட்டுவதற்காக மழைநீரை வெளியேற்றுவதால் சாகுபடியின்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்' என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள இக்கண்மாய்க்கு கள்ளந்திரியில் இருந்து பெரியாறு 10 வது கால்வாய் வழியாகவும், அழகர்கோவில் பகுதி மழை நீர் வெள்ளரிப்பட்டி கண்மாய் நிரம்பி மற்றொரு கால்வாய் மூலமும் தண்ணீர் வருகிறது.
இங்கு நிரம்பும் தண்ணீர்சுண்ணாம்பூர், ஆமூர், மருதுார் கால்வாய்கள் வழியாக வெளியேறி 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. தற்போது மழை நீரை கண்மாயில் சேமிக்காமல் சுண்ணாம்பூர் கால்வாயில் பொதுப்பணித்துறை வெளியேற்றி வருகிறது.பெரியாறு பாசன கோட்டம் மடைக்குழு தலைவர் கிருஷ்ணன் கூறுகையில், ''மருதுார் வயல்களுக்கு தண்ணீர் செல்ல மடை கட்டுவதை தாமதமாக்குகின்றனர்.
அதனால் மழை நீரை சேமிக்காமல் சுண்ணாம்பூர் கால்வாயில் பொதுப்பணித்துறையினர் வெளியேற்றுவதால் கண்மாய் வறண்டுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமல் நீரை சேமிக்க வேண்டிய அதிகாரிகளே, வீணாக்குவது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது'' என்றார்.செயற்பொறியாளர் பவளகண்ணன் கூறுகையில், ''எதிர்பாராத மழையால் மடை கட்டும் பணி தாமதமாகிறது. ஒருவாரத்தில் பணிகள் முடிக்கப்படும்'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மொத்தத்தில், தேவைப்படும் விவசாயிகளுக்கு வேண்டிய பொழுது நீரை சேமித்து உதவாமல், நொண்டிக்காரணம் தேடுவதில் தான் பொதுப் பிணி அதிகாரிகள் உள்ளனர்