கெலவரப்பள்ளி அணைக்கு 2,757 கன அடி நீர்வரத்து
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 2,209 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால், நேற்று காலை நீர்வரத்து, 2,757 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 42.48 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில், ஏழு மதகுகள் வழியாக, 2,820 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதிகளவு நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றங்கரையோர மக்களுக்கு, வருவாய்த்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஆற்றில் ரசாயன நுரை பெருக்கெடுத்து ஓடியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!