ADVERTISEMENT
பெரம்பலுார்:பள்ளி மாணவியர் மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவது, பெற்றோர் மத்தியில், அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.பள்ளி மாணவியர் நான்கு பேர், தடுப்பணை பகுதியில், சீருடையில் அமர்ந்து, ஊறுகாயை தொட்டுக்கொண்டு, மதுவை பகிர்ந்து குடிக்கும் வீடியோ காட்சி, அரியலுார், பெரம்பலுார் மாவட்ட பகுதிகளில், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள மாணவியர் குறித்த விபரமும், எப்போது நடந்த சம்பவம் என்பது குறித்தும் தகவல் இல்லை.இருப்பினும், பள்ளி சீருடையில் மது அருந்தியதுடன், அதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட சம்பவம், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அது மது இல்லை ஓய். கேரளத்து கட்டஞ்சாய். சும்மா கலாய்க்கறதுக்கான வீடியோ... தண்ணி அடிக்கிறவங்க இப்பிடி அடிக்க மாட்டாங்க.