Load Image
dinamalar telegram
Advertisement

உயிரிழந்த 4 போலீசாருக்கு 42ம் ஆண்டு அஞ்சலி

திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த, நான்கு போலீசாருக்கு, 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க, 42ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. வேலுார் மாவட்டம், திருப்பத்துார் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், கடந்த, 1980ம் ஆண்டுகளில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதில், 1980 ஆக., 6ல் ஏலகிரியில் நக்சலைட்டுக்கும், போலீசாருக்கும் நடந்த மோதலில், நான்கு போலீசார் பலியாயினர். இறுதி சடங்கில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., பங்கேற்றார். மேலும், நக்சலைட்டுகள் ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு அடியோடு ஒழிக்கப்பட்டது. நக்சலைட் தாக்குதலில் உயிர் நீத்த, நான்கு போலீசாருக்கும் திருப்பத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் மணி மண்டபம் கட்டப்பட்டது. வீரமரணம் அடைந்த போலீசாருக்கு இங்கு ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன்படி நேற்று, 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க, 42ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாஜி டி.ஜி.பி., தேவாரம், திருப்பத்துார் கலெக்டர் அமர் குஷ்வாஹா, டி.ஐ.ஜி., ஆனி விஜயா உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement