வாழை மரங்கள்சாய்ந்து நாசம்
கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஊட்டி -- மைசூரு தேசிய நெடுஞ்சாலை, கோழிக்கோடு சாலை என, பல இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதித்தது. மீட்பு குழுவினர் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். சேதமடைந்த மின் கம்பங்கள், மின் கம்பிகளை மின் ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, ஸ்ரீமதுரை, குன்றுதால் பகுதியில் பாக்கியநாதன் என்பவர் பயிரிட்டிருந்த, 500 நேந்திரன் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. கிராம நிர்வாக அலுவலர் நாசர் ஆய்வு செய்து, நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!