தாயிடம் சேர்க்கப்பட்டகுட்டி காட்டெருமை
குன்னூர்:குன்னுாரில் தாயைவிட்டு பிரிந்த காட்டெருமை குட்டியை மீட்டு தாயிடம் சேர்த்தனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் சேலாஸ் தபால் அலுவலகம் அருகே, பிறந்து இரு தினங்களே ஆன காட்டெருமை குட்டி ஒன்று தவித்து கொண்டிருந்தது. தகவலின் பேரில், குன்னுார் ரேஞ்சர் சசிகுமார் தலைமையில், வனத்துறையினர் அங்கு சென்று நடத்திய ஆய்வில், அருகே உள்ள எஸ்டேட்டில் தாய் காட்டெருமை இருந்தது தெரிய வந்தது. குட்டியை மீட்டு, தாய் காட்டெருமையுடன் வனத்துறையினர் சேர்த்தனர். தாய் காட்டெருமை, தனது குட்டியை நாக்கால் தடவி பாசத்தை வெளிப்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!