Load Image
dinamalar telegram
Advertisement

மாணவியரிடம் சில்மிஷம்: ஆசிரியருக்கு 79 ஆண்டு

கோழிக்கோடு-பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கணித ஆசிரியருக்கு 79 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கண்ணுார் ஆரம்பப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றியவர் கோவிந்தன் நம்பூதிரி, 50.இவர் கடந்த 2013 - 14ம் ஆண்டுகளில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்த நான்கு மாணவியருக்கு, வகுப்பறையிலேயே பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.


இதையடுத்து, அவர் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கோழிக்கோடு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. நீதிபதி முஜீப் ரகுமான் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். தீர்ப்பில் அவர் உத்தரவிட்டதாவது:கோவிந்தன் நம்பூதிரி, சிறுமியருக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ், அவருக்கு 79 ஆண்டு சிறைத்தண்டனையும், 2.7 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement