Load Image
dinamalar telegram
Advertisement

லஞ்சம் கொடுத்த வழக்கில்தொழிலதிபர் மகன் கைது

புதுடில்லி-துறைமுக உயரதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், ஒடிசாவின் மிகப் பெரும் தொழிலதிபரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரபல தொழிலதிபர் மகிமானந்த மிஸ்ரா, ஏற்றுமதி, ஷிப்பிங் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டுஉள்ளார். இவருடைய 'ஒடிசா ஸ்டீவ்டோர்ஸ் லிமிடெட்' நிறுவனம், பாராதீப் துறைமுகத்தில் கோலோச்சி வருகிறது. சமீபத்தில் இந்த துறைமுகத்தில் பொருட்களை கையாளும்போது, அங்குள்ள 'கன்வேயர் பெல்ட்' இயந்திரத்தை, இந்நிறுவனம் சேதப்படுத்தியுள்ளது.

இதை சீரமைக்க அதிக செலவாகும் என்பதால், துறைமுகம் வாயிலாகவே மேற்கொள்வது குறித்து நிறுவன உயரதிகாரிகள், துறைமுகத்தின் தலைமைப் பொறியாளர் சரோஜ் குமார் தாஸ் உடன் பேச்சு நடத்தினர்.அப்போது தலைமைப் பொறியாளர், 60 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதில், 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுஉள்ளது. இதைத் தவிர, ஒரு அடுக்குமாடி குடியிருப்பை அந்த அதிகாரியின் பெயரில் வாங்குவதற்காக, கட்டுமான நிறுவனத்துக்கு முன்பணமாக, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பணத்தை சரோஜ் குமார் தாசின் இடைத் தரகரிடம் ஒப்படைக்கும்போது, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் சரோஜ்குமார் தாஸ், தொழிலதிபர் மகிமானந்த மிஸ்ராவின் நிறுவன அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இந்த வழக்கு தொடர்பாக, மகிமானந்த மிஸ்ரா, அவருடைய மகன்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவருடைய மகன் சர்சித் மிஸ்ரா, கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சிசிர் குமார் தாஸை நேற்று கைது செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement