சிலிண்டர் வெடித்து நான்கு பேர் பலி
பாட்னா-பீஹாரில் ஆற்றில் சென்று கொண்டிருந்த படகில் இருந்த 'காஸ்' சிலிண்டர் வெடித்ததில், நான்கு பேர் உயிரிழந்தனர்.பீஹாரின் பாட்னாவில் உள்ள சோனே ஆற்றில் நேற்று சிலர் படகில் சென்றனர். அதில் காஸ் சிலிண்டர் வைத்து சமையல் செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்தது. இதில், நான்கு பேர் அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்தனர்; மற்றவர்கள் காயம் அடைந்தனர். விபத்து ஏற்பட்டும் படகு மூழ்காததால் காயம் அடைந்தவர்கள் உடனடியாக கரைக்கு கொண்டு வரப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!