சத்தீஸ்கரில் மர்ம நோய்2 ஆண்டில் 61 பேர் பலி
சுக்மா-சத்தீஸ்கரில் மர்ம நோயால் கடந்த இரண்டு ஆண்டுகளில், 61 பேர் மரணம் அடைந்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ரெகாட்கட்டா கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மர்ம நோயால், 61 பேர் மரணம் அடைந்துள்ளதாக அக்கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, அந்த கிராமத்துக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்கள் அங்கு நடத்திய முதல்கட்ட ஆய்வில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 47 பேர் மரணம் அடைந்திருப்பது தெரிய வந்தது.
அங்குள்ள நீர் நிலைகளில் அளவுக்கு அதிகமாக 'புளோரைடு' மற்றும் இரும்புச் சத்து இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.மேலும், அந்தக் கிராமத்தில் வசிக்கும் 1,000 பேரில் ஏராளமானோருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. அந்தக் கிராமத்தின் நீரின் தன்மை மற்றும் மண் தன்மை ஆகியவை குறித்து விரிவான அறிக்கை தயாரித்து அளிக்க, சுகாதார துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!