பால்குட உற்ஸவம்
திருநகர் : திருநகர் அய்யனார் அச்சமுத்தம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குட உற்ஸவம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். மூலவர்களுக்கு பாலாபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் கல்கத்தா காளியம்மன் கோயிலில் மூலவருக்கு வளையல் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பேரையூர்: முத்துக்குழி மாரியம்மன், காளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!