Load Image
dinamalar telegram
Advertisement

நகை வழிப்பறி



மதுரை : மதுரை புட்டுத்தோப்பு பாண்டியராஜன். நகைக்கடை ஊழியர். உரிமையாளர் 'ஹால்மார்க்' போடுவதற்காக துாத்துக்குடியிலுள்ள நகைக்கடையில் கொடுத்த நகையை வாங்கி வருமாறு கூறினார்.அங்கிருந்து 6 பவுன் நகையை வாங்கி பாண்டியராஜன் பஸ்சிலிருந்து கிராஸ் ரோட்டில் இறங்கினார். வீட்டிற்கு நடந்து சென்றபோது 2 பேர் பையை கொடுக்குமாறு மிரட்டினர். மறுக்கவே நகை பையை பறித்த அவர்கள் தயாராக டூவீலரில் நின்ற மற்றொரு நபருடன் தப்பினர். நகை மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம். கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement