ADVERTISEMENT
கூடலுார்:கூடலுாரில், 850 தன்னார்வலர்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர், பேரிடர் மேலாண்மை மீட்பு குறித்து சிறப்பு பயிற்சி அளித்தனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுார் பகுதியில் மழை சமயத்தில், அரசு துறைகளுக்கு உதவுவதற்காக, 850 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வருவாய் துறை சார்பில், பேரிடர் மேலாண்மை மீட்பு குறித்த பயிற்சி முகாம் நேற்று, கூடலுார் நர்த்தகி ஆடிட்டோரியத்தில் நடந்தது.முகாமுக்கு கூடலுார் ஆர்.டி.ஓ., சரவணகண்ணன் தலைமை வகித்து பேசுகையில், ''பேரிடர் காலத்தில் ஆபத்தில் கிக்கியவர்களை தன்னார்வலர்கள் உடனடியாக மீட்டு, முதலுதவி அளிப்பதன் மூலம் அவர்களை காப்பாற்றலாம். அது தொடர்பான முறையான பயிற்சி அவசியம்,'' என்றார்.தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மேலாண்மை மீட்பு மற்றும் முதலுதவி குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தனர். தாசில்தார்கள் சித்தராஜ், நடேஷன், தேசிய பேரிடர் மீட்பு படை எஸ்.ஐ., சஞ்சய்குமார், வனச்சரகர் ராஜேந்திரன், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயகுமார், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!