பள்ளி அருகே கிணறு: மாணவர்கள் அச்சம்
பேரையூர் : பேரையூர் சொக்கம்பட்டி அரசு ஆதிதிராவிட பள்ளி அருகே பாதுகாப்பற்ற கிணறு உள்ளதால் மாணவர்கள், பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். இந்த கிணற்றுக்குள் இரண்டு மாணவர்கள் விழுந்து காயம் அடைந்துள்ளனர். கிணற்றை சுற்றி குடியிருப்புகள், அங்கன்வாடி மையம், நுாலகம் உள்ளது. வகுப்பறையில் இருந்து வெளியே வந்தவுடன் கிணறு இருப்பதால், மாணவர்கள் நடமாட அச்சப்படுகின்றனர். ஒன்றிய நிர்வாகம் கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!